Friday, November 4, 2016
சமூக பாதுகாப்பு துறை பள்ளிகளுக்கு 66 ஆசிரியர்கள்.
சமூக பாதுகாப்புத் துறை உறைவிட பள்ளிகளுக்கு, 66 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் உறைவிடப் பள்ளிகளில், காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 66 பேரை, ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளது. 2012 - 2013ல், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்கள் தேர்வாகி உள்ளனர். அவர்களின் பெயர், பதிவு எண், பிறந்த தேதி, வெயிட்டேஜ் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்கள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. 'இந்த நியமனம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, 'டெட்' தேர்வு குறித்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது' என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா அறிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.