WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 4, 2016

நாளை தேசிய திறனாய்வு தேர்வு.


மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வு,
நாளை, தமிழகம் முழுவதும் நடக்கிறது; இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சி படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது; இதற்கு, மூன்று கட்ட திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதற்கட்ட தேர்வு, மாவட்ட வாரியாக நடத்தப்பட்டு உள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மாநில அளவிலான தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகத்தில், 449 மையங்களில் நடக்கும் தேர்வில், 6,580 பள்ளிகளை சேர்ந்த, 1.55 லட்சத்து, 657 பேர் எழுதுகின்றனர். காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரையிலும், 30 நிமிட இடைவேளைக்கு பின், 11:30 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரையிலும் தேர்வு நடக்கிறது. 'மாணவர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு துவங்குவதற்கு, ஒரு மணி நேரம் முன், 8:30 மணிக்கே தேர்வறைக்கு வந்து விட வேண்டும்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.