WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 4, 2016

அரசு விடுமுறை அரசாணை தாமதம் : காலண்டர் தயாரிப்போர் அதிருப்தி.

அடுத்த ஆண்டுக்கான, அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை வெளியிடப்படாததால், காலண்டர் அச்சிடுவோர் அதிருப்தி
அடைந்துள்ளனர்.ஆண்டுதோறும், தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம், அரசாணையாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில், காலண்டர் தயாரிப்போர், காலண்டரில் அரசு விடுமுறை நாட்களை குறிப்பர். கடந்த ஆண்டு, அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம் வெளியாவதில் தாமதமானது. ஏமாற்றமடைந்த, காலண்டர் தயாரிப்போர், பொதுவான விடுமுறை நாட்களை கணக்கிட்டு, காலண்டரை அச்சிட்டனர்.'இந்த ஆண்டும் தாமதம் ஏற்படாமல், 2017க்கான, அரசு விடுமுறை நாட்கள் குறித்த அரசாணையை, விரைவாக வெளியிட வேண்டும்' என, காலண்டர் தயாரிப்பாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். நவம்பர் மாதமாகியும், அரசாணை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, பொதுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் அலுவலகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், அரசாணை வெளியிடப்படும்' என்றனர். விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால், காலண்டர் அச்சிட முடியாமல், காலண்டர் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.அரசு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும், காலண்டர் அச்சடிக்க முடியாமலும், எவ்வளவு நாள் காத்திருப்பது என தெரியாமலும் தவித்து வருகின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.