WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 16, 2016

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலைக் குறைப்பு அமலுக்கு வந்தது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.13-ல் இருந்து ரூ.65.41 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.58.02-ல் இருந்து 56.24 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை உயர்ந்த பெட்ரோல் விலை இப்போது சிறிதளவு குறைந்துள்ளது. அதேபோல, டீசல் விலை அக்டோபர் மாதத்தில் இருந்து மூன்று முறை உயர்ந்தது; இப்போது குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் கடைசியாக நவம்பர் 5-ஆம் தேதி பெட்ரோல் விலையை 89 பைசாவும் டீசல் விலையை 86 பைசாவும் அதிகரித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.