WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 16, 2016

'குரூப் - 2 ஏ' கவுன்சிலிங் வரும் 21ம் தேதி துவக்கம் - டிசம்பர் 4 வரை நடக்கிறது : .என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.

'குரூப் - 2 ஏ பதவிகளுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் பணிக்கு, 1,863 காலியிடங்களை நிரப்ப, ஜன., 24ல், 'குரூப் - 2 ஏ' எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூன், 8ல் வெளியாகின. வெற்றி பெற்றோருக்கு, ஜூலை, 4 முதல், 19 வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பணி நியமன கவுன்சிலிங், வரும், 21 முதல் டிச., 2 வரை, சென்னையிலுள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும். அழைப்பு கடிதம் குறித்த விபரங்களை தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.