Saturday, November 19, 2016
ஓய்வூதிய நிபுணர் குழு பதவிக்காலம் நீட்டிப்பு.
ஓய்வூதிய நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, தமிழக அரசு நீட்டித்துள்ளது. கடந்த, 2003 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரசு ஊழியர்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதை சமாளிக்க, தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம், செப்டம்பரில் கருத்து கேட்டது. இக்குழுவின் பதவிக்காலம், செப்., 26ல் முடிந்தது. குழுவின் பணிகள் முடியாத நிலையில், பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை.
இது குறித்து, நமது நாளிதழில், சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, நிபுணர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.