WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 2, 2016

1,260 கலையாசிரியர் பணியிடம் விரைவில் நிரப்ப அரசு திட்டம்.

''ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 1,260 கலையாசிரியர் காலிப்
பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்தார். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட, கலைப் பாடப் பிரிவுகளுக்கு, 1,260 பணியிடங்கள் காலியாக உள்ளன; நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ளன. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில், ''அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, கலை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,260 கலையாசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். இத்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்,'' என்றார்.

1 comment:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.