மாணவர்களின் ஆதார் எண்ணை, டிச., 20க்குள் பதிவு செய்ய,
பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது. அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், ஆதார் எண் பதிவு செய்து, அதை பள்ளி ஆவணங்களில் குறித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், இரு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பல காரணங்களால், பல லட்சம் மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண் கிடைக்கவில்லை. எனவே, ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்ட, மின்னணு கல்வி மேலாண்மை திட்டமான, எமிஸ் திட்டத்திலும், மாணவர்களின் விபரங்களை, முழுமையாக பதிவேற்ற முடிவதில்லை. இந்நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆதார் எண் பெறும் வகையில், பள்ளிகளில், தமிழ்நாடு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. யாரும் விடுபடாமல், டிச., 20க்குள், ஆதார் எண் பதிவு செய்ய, பள்ளிகளுக்கு, 'கெடு' விதிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.