சென்னை: தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, உயர் கல்விக்கான
இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொது செயலர் ஜனார்த்தனன், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட, ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், நேற்று, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறியதாவது:
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களின் உயர் கல்விக்காக, இரண்டு முறை ஊக்க ஊதியம் தரப்படுகிறது. தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஒரு முறை மட்டுமே ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.
இதை, இரண்டு முறையாக உயர்த்த வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்கப்படும். இந்த ஊதியத்தை, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.