Friday, December 30, 2016
தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டு பெற அறிவிப்பு.
’எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,’ என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், ஜன., 4ம் தேதி நடக்கிறது. அரசுத்தேர்வுகளின் சேவை மையங்களில், ஆன்- லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளத்திற்கு சென்று, DEPARTMENT OF GOVT EXAMINATIONS ONLINE APPLICATION என்ற வாசகத்தினை கிளிக் செய்து, தோன்றும் பக்கத்தில், ESLC PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும்; அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்; தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது. இத்தகவலை கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.