WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 31, 2017

இன்ஜி., கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது.


வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க, அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது. பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க, பள்ளிக்கல்வித் துறையிலும், கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்திலும், கல்வி கட்டண கமிட்டிகள் செயல்படுகின்றன. இந்த கமிட்டிகள், பள்ளி, கல்லுாரிகளில் உள்கட்டமைப்பு, மாணவர் எண்ணிக்கை, பாடத்திட்டம், கூடுதல் வசதிகள் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கிறது. வரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில், தற்போதுள்ளதை விட, அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கான, கட்டண நிர்ணய பணி துவங்கி உள்ளது. அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், முதுநிலை அறிவியல் படிப்பு நடத்தும் கலை, அறிவியல் கல்லுாரிகள், தங்கள் விண்ணப்பங்களை, பிப்., 28க்குள் அனுப்புமாறு, சுயநிதி கல்லுாரிகள் கட்டண நிர்ணய கமிட்டி அறிவித்துள்ளது. 'புதிய கட்டணம், மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்' என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.