எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில்,
கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல், அனைத்து மாநில மாணவர்களும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் பங்கேற்க முடியுமா என்பது குறித்து, சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு உறுப்பினர், அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், இந்தியாவில் நடக்கும், 'நீட்' தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, வெளிநாடுகளில் தேர்வு மையங்கள் கிடையாது. அதில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசின் ஒதுக்கீட்டிலோ, தமிழக ஒதுக்கீட்டிலோ இடங்கள் கிடையாது. ஆனால், அவர்களால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெற முடியும். அதற்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.