WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 31, 2017

சி.பி.எஸ்.இ., திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்.


சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், தனியார் பள்ளிகள் இணைய, ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், இணையும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணிகள் முடிந்து விட்டன. இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ.,யில் இணைய விரும்பும் பள்ளிகளிடம், ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி, ஜன., 2 முதல், துவங்கி உள்ளது. 'பள்ளிகள், http://cbseaff.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம். ஜூன், 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.