சென்னை கல்வி துறை இயக்குனரகத்தை, வரும், 3ல் இடைநிலை
ஆசிரியர்கள் முற்றுகையிடுகின்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஆறாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள பாதிப்புகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதை வலியுறுத்தி, பிப்.,3ல் சென்னையில் உள்ள, மாநில துவக்க கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டது. இதில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து, 500 பேர் பங்கேற்கின்றனர்.
பிப்.,2ம் தேதி இரவு, எட்டுக்கும் மேற்பட்ட பஸ்களில் சென்னைக்கு கிளம்புகின்றனர். மறுநாள் (3ம் தேதி) தற்செயல் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் பங்கேற்கவும் கூட்டணி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.