பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2
பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.