WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 12, 2017

ஆளுங்கட்சி அதிகார போட்டியால் 'நீட்' தேர்வு மசோதாவுக்கு சிக்கல்.

தமிழகத்தில், ஆளுங்கட்சியின் அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஒப்புதல் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய பொது நுழைவுத் தேர்வில், அனைத்து மாநில மாணவர்களும், தேர்ச்சி பெற வேண்டும் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின், சில மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்ச்சியில் இருந்து, கடந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, இதுவரை எந்த மாநிலத்துக்கும், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இதனால், அனைத்து அரசு, தனியார் கல்லுாரிகளில், மத்திய, மாநில இடங்களில் சேர, 'நீட்' தேர்வு எழுதுவது கட்டாயம். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு, மே, 7ல், நடத்தப்படுகிறது. ஜன., 31 முதல், ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கி, மார்ச், 1ல் முடிகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும், 'நீட்' தேர்வில் விலக்கு அளித்து, ஜன., 31ல், தமிழக சட்டசபையில், மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் எப்படியும் அனுமதி பெற்று 
விடுவார் என்ற, மாணவர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ராஜினாமா செய்ததால், அவரது தலைமையிலான அரசு, காபந்து அரசாக செயல்பட்டு வருகிறது. 
அ.தி.மு.க,வில் உள்ள அதிகார போட்டியால், 'நீட்' தேர்வு மசோதாவுக்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பெற்றோர் 
கூறுகையில், 'நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, 20 நாட்களே அவகாசம் உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காவிட்டால், தமிழக மாணவர்கள், இந்த தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படும். அரசு ஒதுக்கீட்டில், 2,500 மருத்துவ இடங்களில், சேர முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.