அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவின் பெயரைக்கூறி, பலர் ஆதிக்கம் செலுத்துவதால், தமிழகத்தின் பல பல்கலைகளில் துணைவேந்தர் முதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வரை, நிர்வாக இடங்கள் காலியாக உள்ளன.
• மதுரை காமராஜர் பல்கலையில், இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பதிவாளர் பதவியும், ஆறு மாதங்களுக்கு மேல் காலியானதால் அந்த பொறுப்பை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜயன் கவனித்தார். அவரது பதவிக்காலமும், பிப்., 8ல் முடிந்ததால்,
பல்கலை நிர்வாகங்கள் ஸ்தம்பித்துள்ளன
• சட்ட பல்கலையில், துணைவேந்தர் வணங்காமுடியின் பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகியும், தேடல் குழு அமைக்கப்படவில்லை. பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இடங்களும் காலியாக உள்ளன
• சென்னை பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகனின் பதவிக்காலம் முடிந்து விட்டது. பதிவாளர் டேவிட் ஜவஹரின் பதவிக்காலம், மார்ச், 6ல் முடிகிறது. துணைவேந்தர் பதவியும், ஓர் ஆண்டுக்கு மேல் காலியாக உள்ளது
• ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பதிவாளர், கலைசெல்வனின் பதவிக்காலம் முடிந்து விட்டது
• பாரதியார் பல்கலையில் முறைகேடு புகாரை தொடர்ந்து, பதிவாளர் செந்தில்வாசன் பணி நீக்கம் செய்யப்பட்டார். கூடுதல் பொறுப்பு வகித்த பேராசிரியர் மோகனும், பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதனால், அந்த இடம் காலியாகவே உள்ளது
• அண்ணா பல்கலையில் துணைவேந்தர் பணியிடமும், 10 மாதங்களாக காலியாக உள்ளது. தேடல் குழு நியமித்த பின்னும் இழுபறி நீடிக்கிறது
• மீன்வள பல்கலையிலும் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது
• திருவள்ளூவர் பல்கலையிலும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பதிவாளர் இடம்
காலியாக உள்ளதால், நிதி கட்டுப்பாட்டு அதிகாரி அசோகன், நிர்வாகங்களை
கவனிக்கிறார்
• தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜாபர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்தை கவனிக்கும் பதிவாளர் விஜயனும், நீண்ட விடுப்பில் சென்றதால் அங்கும் இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.
காலியிடங்களை நிரப்பாதது குறித்து, உயர்கல்வித்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:
• உயர்கல்வித்துறையில், அரசியல் குறுக்கீடுகளால், எந்த பணியும் முறையாக நடக்கவில்லை. எப்போதும் இல்லாத வகையில், பல்கலை துணை வேந்தர்கள்,
பதிவாளர் இடங்கள் காலியாக உள்ளன. துணைவேந்தர்களை நியமித்தால் தான், மற்ற இடங்களை நிரப்ப முடியும். இதனால், உயர்கல்வித்துறை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது
• துணைவேந்தர் இருக்கும் இடங்களில், துணைவேந்தரே, கீழ் பதவிகளை நிரப்பலாம். ஆனால், துணைவேந்தர் நியமனத்திலும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமனத்திலும், அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவின் பெயரை சொல்லி, அதிக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதனால், நியமன பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு தகவல்கள் கிடைத்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.