பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தட்கல் திட்டம் வாயிலாக வியாழக்கிழமை (பிப்.16) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடலூர் அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் இரா.வீரக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) அனுமதிக்கப்படுவர்.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். சேவை மையங்கள் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தட்கல் திட்டத்தில் பிப்.16, 17-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
எனினும் செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர் என்று அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.