WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 9, 2017

விஏஓ பணிக்கு மார்ச் 13 -இல் 2 -ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்குகிறது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விஏஓ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியானது.
இந்த நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 13 -ஆம் தேதி தொடங்கி 15 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணைய இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.