WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 28, 2017

பிளஸ் 2 கணிதத்தேர்வு: 6 மதிப்பெண் வினாக்கள் கடினம்.

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிதாக இருந்தது இருப்பினும் 6 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த சில வினாக்கள் கடினமாக இருந்ததாக
தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர உதவும் கட் ஆஃப் மதிப்பெண்ணை தீர்மானிப்பதில் கணித பாடம் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தப் பாடத்தைப் பொருத்தவரை கடந்த 6 ஆண்டுகளில் எளிமை, கடினம், சராசரி என வினாத்தாளின் தன்மை மாறிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான கணிதத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை முகப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய ரா.பூங்குழலி, எம்.ரம்யா, கே.கதிரவன் உள்ளிட்ட மாணவர்கள் கூறியது: கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்தன. 6 மதிப்பெண் வினா பகுதியில், மையம் 2, 5 இயக்க வரைகளுக்கு இடைப்பட்ட தூரம் என்ற 55-ஆவது வினா, அதே கேள்வி எண்ணில் தொகை நுண் கணித பாடத்தில் கேட்கப்பட்டிருந்த மற்றொரு வினா உள்பட 3 வினாக்கள் கடினமாக இருந்தன. மேலும் கலப்பு எண்கள் குறித்து கேட்கப்பட்ட 45-ஆவது வினா சற்று குழப்பமாக இருந்தது. இருப்பினும் 10 மதிப்பெண் வினா பகுதியில் மொத்தம் உள்ள 15 வினாக்களில் 1 வினாவை தவிர மற்ற வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தன. எனவே 180-க்கும் மேல் மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார். இது குறித்து வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் பாஸ்கர் கூறியது: நிகழாண்டு பிளஸ் கணித வினாத்தாள் சராசரி மாணவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்திருக்கும். குறிப்பாக 6 மதிப்பெண் பகுதியில் 15 வினாக்களில் கட்டாய வினா உள்பட 5 வினாக்கள் சற்று யோசித்து பதிலளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. காப்பி: 20 மாணவர்கள் பிடிபட்டனர் பிளஸ் 2 கணிதம், விலங்கியல் பாடங்களில் காப்பியடித்ததாக 20 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கான தேர்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக கணிதத் தேர்வை 5 லட்சத்து 368 மாணவர்களும், விலங்கியல் தேர்வினை 87,125 மாணவர்களும் எழுதினர். இந்தநிலையில் சேலம், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விலங்கியல் பாடத்தில் காப்பியடித்ததாக 14 மாணவர்களும், கணித பாடத்தில் 6 மாணவர்களும் பிடிபட்டுள்ளனர். இந்த தகவலை அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.