WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 2, 2017

இன்ஜினியரிங் நுழைவு தேர்வு 2018ல் அமல்.


இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு
தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டிஉள்ளது.இந்த நிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம். இதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.