WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 2, 2017

மத்திய அரசில் 2.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள்!


புதுடில்லி: மத்திய அரசு பட்ஜெட்டில் குறிப்பிட்டதை போன்று 2.80 லட்சம் ஊழியர்களை கூடுதலாக நியமிக்க முடிவு செய்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்திற்கு பிறகு, வருமான வரித்துறை உள்ளிட்ட முக்கிய வரி வசூல் துறைகளில் கூடுதலாக ஆட்கள் தேவைப்படுகிறது. இதனால் சுங்க வரி, கலால் வரி, வருமான வரி உள்ளிட்ட துறைகளில் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 46,000 முதல் 80,000 பேரை கூடுதலாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது சுங்க துறையில் 50,600 பேரும், கலால் துறையில் 91,700 பேரும் பணியாற்றி வருகின்றனர். விரைவில் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி துறைக்கு 41,000 பேர் வரை தேவை. ரயில்வே துறை ஊழியர்கள் எண்ணிக்கையில் 2018 ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப் போவதில்லை என மத்திய அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதற்கு பதில் விண்வெளி, அணுசக்தி, அமைச்சரவை செயலகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகங்கள், வெளியுறவு விவகாரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.