WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 11, 2017

வணிகவியல் தேர்வு வினாத்தாளில் பிழை.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். வணிகவியல் தேர்வில், பி பிரிவில், 41வது கேள்வியாக, தரவரிசை கோட்பாடு பற்றி கேட்கப்பட்டிருந்தது. நான்கு மதிப்பெண்ணுக்கான இந்த கேள்வியில், தரவரிசையில், கூடுதலாக, 'ச்' சேர்க்கப்பட்டு, வினாத்தாள் பிழையாக இருந்தது. ஆனாலும், மாணவர்கள் பிழையை தெரிந்து கொண்டு, கேள்வியை சரியாக புரிந்து பதில் எழுதினர். வினாத்தாள் குறித்து, வேலுாரை சேர்ந்த, வணிகவியல் ஆசிரியரும், தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகியுமான, ஜனார்த்தனன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வு வினாத்தாளில் பிழைகள் இருக்கக் கூடாது. எதிர்காலத்தில், இந்த பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில், நேற்றைய தேர்வுகளில், 14 பேர் முறைகேடு புகாரில் பிடிபட்டதாக, தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.