WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 11, 2017

10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்' தர கட்டுப்பாடு.

பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல் முடிகிறது. 'சென்டம்' வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 8ல் துவங்கியது; வரும், 28ல் முடிகிறது. தமிழ் அல்லாத, பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, வரும், 30ல், விருப்ப மொழி தேர்வு நடக்கிறது. விடைத்தாள் திருத்தத்தை, வரும், 31ல் துவக்கி, ஏப்., 12க்குள் முடிக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. 'மொழி பாடங்களில், சென்டம் வழங்கும் முன், தலைமை முகாம் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். 'முக்கிய பாடங்களுக்கு, சென்டம் பெறும் விடைத்தாள்களை, மறு ஆய்வு செய்த பின்னே, மதிப்பெண் இறுதி செய்யப்பட வேண்டும்' என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.