WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 11, 2017

’செட்’ தேர்வு; முடிகிறது அவகாசம்!.

உதவி பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணிபுரிய, மத்திய அரசின், ’நெட்’ அல்லது மாநில அரசின், ’செட்’ தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், தேர்ச்சி பெறாதவர்கள், யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்க வேண்டும். தமிழகத்தில், மாநில அரசின், ’செட்’ தகுதி தேர்வு, தமிழக அரசால், பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில், கொடைக்கானல், தெரசா பல்கலை மூலம், ஏப்., 23ல் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, பிப்., 12ல் துவங்கியது. ’செட்’ இணையதளத்தில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, நாளைக்குள் வழங்க வேண்டும். நாளைக்குள் விண்ணப்பிக்காதோர், தாமத கட்டணம், 300 ரூபாயுடன், மார்ச், 19க்குள் விண்ணப்பிக்கலாம் என, தெரசா பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.