WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 3, 2017

திருவள்ளுவர் பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி 'சஸ்பெண்ட்'.


திருவள்ளுவர் பல்கலையின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அசோகன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆனால், உத்தரவை பெறாமல், அவர் ஓட்டம் பிடித்துவிட்டதாக, புகார்
எழுந்துள்ளது. வேலுார் திருவள்ளுவர் பல்கலையின், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக, மூன்றாண்டுகளுக்கு முன், பேராசிரியர் அசோகன் நியமிக்கப்பட்டார். துணைவேந்தர், பதிவாளர் இடங்கள் காலியானதால், பதிவாளர் பதவி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்புகளை கூடுதலாக கவனித்தார். அவரது நிர்வாகத்தில், பல பிரச்னைகள், நிதி நிர்வாக குளறுபடிகள் ஏற்பட்டன. புதிய துணைவேந்தராக முருகன் நியமிக்கப்பட்டதும், பல்கலையில் களையெடுப்பு துவங்கியது. மூன்று பொறுப்புகளில் இருந்தும், பேராசிரியர் அசோகன் இரண்டு வாரங்களுக்கு முன், திடீரென விடுவிக்கப்பட்டார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, பேராசிரியர் செந்தில்குமாரும், பதிவாளர் பொறுப்பில் பேராசிரியர் பெருவழுதியும் நியமிக்கப்பட்டனர். அதனால், அசோகன் தான், ஏற்கனவே பணியாற்றிய, திருவாரூர் அரசு கல்லுாரியில் பணியில் சேர முயன்றார். அதற்குள், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, உயர்கல்வித் துறை உத்தர விட்டது. இதையறிந்த, அசோகன் கல்லுாரிக்கு வரவில்லை; அவரிடம், 'சஸ்பெண்ட்' உத்தரவை வழங்க முடியாமல், ஊழியர்கள் திணறினர். அவரின் முகவரியை கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, திருவாரூர் அரசு கல்லுாரி நிர்வாகத்திடம், 'சஸ்பெண்ட்' உத்தரவை வழங்கி, அவர் பணியில் சேர வந்தால், கையெழுத்து பெற, உயர்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இரு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், அசோகன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.'அசோகன் நிர்வாகத்தில், பல்கலையில், பல குளறுபடிகள் நடந்துள்ளதால், அவர் மீது, துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்' என, அனைத்துப் பல்கலை ஆசிரியர் சங்கம், உயர்கல்வி அமைச்சர், அன்பழகனிடம் மனு அளித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.