WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 25, 2017

அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.


அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசுத் தேர்வுகள் துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 இடங்களும், கோவை, திருச்சி ஆகிய மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பணியிடம் என உள்ள இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 8 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.1.2017 அன்றைய நிலையில், பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தவருக்கு 18 முதல் 35 வயது வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 32 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர், கல்வித் தகுதி, பிறந்த தேதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன்கூடிய, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டிய சுயவிலாசமிட்ட உறையுடனான விண்ணப்பத்தை, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் "அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயலாளர், அரசுத் தேர்வுகள் இயக்ககம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு ஏப்ரல் 3 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.