பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களில் பதிவு செய்யும்படி, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது.
பல்கலை மானியக்
குழுவான யு.ஜி.சி., கட்டுப்பாட்டில், பல்கலைகள், கல்லுாரிகள் செயல்படுகின்றன. எனவே, யு.ஜி.சி., விதிகளை பின்பற்றாத கல்லுாரி மற்றும் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, யு.ஜி.சி.,யால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேபோல், ஆராய்ச்சி படிப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு, ஒவ்வொரு பல்கலைக்கும்,
யு.ஜி.சி., மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பல்கலைகள் கணக்கு காட்டுகின்றன. இந்த பட்டியலில், பல போலி விபரங்கள் இடம்பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, அனைத்து பல்கலைகளும், ஆராய்ச்சி படிப்பு விபரங்களை, தங்கள் பல்கலை இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பல்கலை மாணவர்களும், தங்களின் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.