WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2017

11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்?

    

11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது,

''11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 11, 12 வகுப்புகளில் இரண்டு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களையும் கணக்கிட்டு சராசரி அடிப்படையில் ஒரே சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் உள்ளது போல 3 ஆண்டுகளின் மதிப்பெண் சராசரியைக் கொண்டு கடைசி ஆண்டில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

'மதிப்பெண்களைக் குறைக்கத் திட்டம்'

11, 12-ம் வகுப்புகளுக்கு 200 மதிப்பெண்கள் என்பதை, பாடவாரியாக 100 மதிப்பெண்கள் என்று குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு நேரமும் குறைய வாய்ப்புண்டு.

பாடத் திட்டத்திலும் மாற்றம் கொண்டுவர அரசாணை விரைவில் வெளியாகும்.

வகுப்புகளுக்கு ஏற்றவாறு சீருடைகளை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்று தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வித் துறை அமைச்சரும், செயலாளரும் பதவியேற்ற பிறகு இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.