WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2017

பள்ளிகளுக்கு பகவத்கீதை கட்டாயமாகிறதா ? பா.ஜ.கவின் அடுத்த மூவ்..!

"நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி தாக்கல் செய்த
மசோதா அடுத்த கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா எம்.பி ரமேஷ் பிதுரி நாடாளுமன்றத்தில் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார். அந்த மசோதவிற்கு 'அனைத்து கல்வி நிலையங்களிலும் ஒழுக்கக் கல்வி பாடப்புத்தகத்தில் பகவத் கீதை கட்டாயம், 2016' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த மசோதாவில், 'நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் பகவத் கட்டாயமாக்கப்பட வேண்டும். அதனை பின்பற்றாத கல்வி நிலையங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். சிறுபான்மையினர் கல்வி நிலையங்களுக்கு மட்டும் அதில் இருந்து விதி விலக்கு' என்று அம்சங்கள் உள்ளது. அந்த மசோதா குறித்து தெரிவித்த ரமேஷ் பிதுரி, 'பகவத் கீதையின் உயர்ந்த கருத்துகளை கற்பிக்கும் போது இளைய தலைமுறையினரை சிறந்த குடிமக்களாகவும், அவர்களது பண்புகளை மேன்மைப்படுத்தவும் உதவும்' என்று தெரிவித்திருந்தார். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது." -

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.