WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 23, 2017

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!

"மத்திய அரசின் 7-வது் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி
வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்துத் துறைகளில் இருந்தும் விபரம் கோரியுள்ளது. அதாவது, "அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விபரம், அவர்களின் ஊதிய விபரம், காலிபணியிட விபரம், 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விபரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விபரம்" ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் கோரியுள்ளது. இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.