WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 29, 2017

ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாட புத்தகங்கள் விற்பனை துவக்கம்.

ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, பாடப்புத்தகங்கள் விற்பனை, மே, 26ல், துவங்கி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 7ல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பாட புத்தகங்கள், நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பல தனியார் பள்ளிகள், புத்தகங்களை மாணவர்களே வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளன. எனவே, மாணவர்களுக்கு நேரடியாக புத்தகம் விற்பனை செய்யும் பணியை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவக்கி உள்ளது. ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து பாடப்பிரிவுகளுக்கான புத்தகங்களின் விற்பனையும் துவங்கி உள்ளது. பாடநுால் கழக விற்பனை மையங்களிலும், மாவட்ட பாடநுால் கழக மண்டல கிடங்குகளிலும், ரொக்க பணம் செலுத்தி, புத்தகங்கள் வாங்கலாம். தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், www.textbookcorp.tn.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மூலமும், புத்தகங்களை கொள்முதல் செய்யலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் போது, புத்தகங்களுக்கான தொகையை, 'நெட் பேங்கிங்' மூலம் செலுத்த வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள், கூரியர் மூலம், மாணவர்கள் பதிவு செய்த முகவரிக்கு, இரண்டு நாட்களில் அனுப்பப்படும். 

இதுகுறித்து, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன் கூறியதாவது:
தற்போது, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ பாட புத்தகங்களும்; 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான புத்தகங்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எந்த பாடப்பிரிவு புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. கூடுதல் விலை கொடுத்து, வேறு யாரிடமும் புத்தகங்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா நுாலகத்திலும்... 
டி.என்.பி.எஸ்.சி., மற்றும் பல்வேறு துறைகள் சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், பள்ளி பாடப்புத்தகங்கள் அடிப்படையில் கேள்விகள் இடம் பெறுகின்றன. அதனால், போட்டி தேர்வர்களின் வசதிக்காக, சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், பாட புத்தகங்கள் விற்பனை மையம் துவங்க, பள்ளிக்கல்வி செயலர் 
உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 'விரைவில் அண்ணா நுாலகத்தில் பள்ளி பாட புத்தகங்கள் விற்பனை மையம் துவங்கப்படும்' என, பாடநுால் கழக மேலாண் இயக்குனர், ஜெகநாதன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.