WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 20, 2017

'சென்டம்' அதிகரிப்பு: மீண்டும் சறுக்கும் தேர்வின் தரம்: சி.பி.எஸ்.இ., போல வினாத்தாள் மாறுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் சென்டம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத னால், 'விடை திருத்தும் முறையை, இன்னும் தரமாக்க வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                     

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், சென்டம் வாங்குவோர் எண்ணிக்கை, லட்சத்தை தொடுவதாக உள்ளது. முந்தைய ஆண்டு களில், சென்டம் எண்ணி க்கை அதிகரித்ததால், விடைத்தாள் திருத்த முறையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, 2016ல், ஓரளவுக்கு தரமான திருத்தம் நடந்தது. 

மீண்டும் இந்த ஆண்டு, சுதந்திரமான திருத்த முறை பின்பற்றப்பட்டதால், சென்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை 

எட்டியுள்ளது. மற்ற மாநிலங்களில், பொது தேர்வில் விடை திருத்தம் மிகத் தரமாகவும், சீராகவும் நடக் கிறது. தமிழகத்தில் மட்டும், 'தியரி' என்ற கட்டுரை எழுதும் வடிவில், வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. 

அதனால், தமிழக மாணவர்கள்,சிந்தித்தல் திறனை பரிசோதிக்கும், போட்டித் தேர்வுகளில் ஜொலிக்க முடிவதில்லை. தேசிய அளவிலும், மற்ற தளங் களிலும், தங்கள் கல்வித் தரத்தை, சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று, பிளஸ் 1லும், பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு களில் சேருவோர், அங்குள்ள சிக்கலான வினாத்தாள்களை எதிர் கொள்ள முடியாமல் திணறு கின்றனர். குறைந்த மதிப்பெண் பெறுவதும், தேர்ச்சி குறைவதுமாக உள்ளது. 

பத்தாம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றதால், பிளஸ் 2வில், அலட்சியமாக இருந்து விடுகின்றனர். பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, உயர் கல்வியில் சறுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வரும் காலங்களில் மதிப்பெண்ணை அள்ளி வழங் கும் தேர்வாக இல்லாமல், மாணவர்களின் சிந்தித் தல் திறனை அதிகரிக் கும் தேர்வாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழக அரசு மாற்ற வேண்டும். 

தற்போது, விடைக்குறிப்பை பார்த்து, சரிபார்க்கும் எழுத்தர் போன்றே, ஆசிரியர்கள் விடை திருத் துகின்றனர். சி.பி.எஸ்.இ., போன்று, தரமான வினாத்தாளை தயாரித்து, விடை திருத்தம் செய்யும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பயிற்சி அளித்து, தரமான திருத்துனர்களாகவும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுஉள்ளது. 

இந்த மாற்றம் வந்தால் மட்டுமே, பிளஸ் 2விலும், பின், கல்லுாரிகளிலும் தமிழக மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்புகளை பெற முடியும் என, கல்வியாளர் கள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.