WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 2, 2017

"பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மறு மதிப்பீடு கிடையாது..!!!" - சி.பி.எஸ்.இ. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கலக்கம்.

"சிபிஎஸ்இ பாடத்தின் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்களின் மதிபெண்ணுக்கு மறு மதிப்பீடு கொடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள கலக்கம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:- கடந்த 28ம்தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியானது. மாணவர்களுக்கு டிஜி லாக்கர் என்ற டிஜிட்டர் முறையில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தாங்கள் எழுதிய தேர்வின் மதிப்பெண் குறித்து ஆய்வு செய்ய வரும் 5ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் பெறும் விடைத்தாள் ஆய்வில் மதிப்பெண் மாற்றம் அல்லது குளறுபடி இருந்தால், விண்ணப்பித்தோறுக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் தேவைப்பட்டால், அதன் நகலையும் ஆன்லைனில் பெறலாம். இதற்கு வரும் ஜூன் 14ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகர் கிடைத்த பின்னர், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுடடிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம். விடைகள் மதிப்படாமல் விடுபட்டு இருந்தால், 7 நாட்களில் மண்டல அலுவலகங்களை அணுகலாம். ஆனால், தேர்வு எழுதி விடுப்பட்டு, மீண்டும் நகல் மூலம் அறியப்பட்ட மதிப்பெண், மறு மதிப்பீடு செய்து கொடுக்க முடியாது என கூறியுள்ளது." - "பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு மறு மதிப்பீடு கிடையாது..!!!" - சி.பி.எஸ்.இ. திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கலக்கம் http://tz.ucweb.com/6_6Rs6

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.