WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 12, 2017

'குரூப் - 1' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு.


சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட, 74 பணியிடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வின், இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக
அரசுத்துறைகளில், டி.எஸ்.பி., - 26, சப் - கலெக்டர் - 19, வணிகவரித்துறை உதவி கமிஷனர் - -21, மாவட்ட பதிவாளர் -- 8, என, 74 காலியிடங்களுக்கு, முதன்மை எழுத்து தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. ஜூலை, 29 முதல், 31 வரை தேர்வு நடந்தது. இதில், 2,926 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தி, அதன் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மொத்தம், 148 பேரின் பதிவு எண், முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஒரு வாரத்தில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், 'தமிழ்நாடு கைத்தறி துணிநுால் துறை இயக்குனர் பதவியில், 14 காலியிடங்களுக்கு, வரும், 29; சிறை அதிகாரி பதவியில், ஆறு இடங்களுக்கு, 30ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்' என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.