WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 26, 2017

பிளஸ் 1க்கு வினா வங்கி தயாரிப்பு பணிகள் தீவிரம்.

பிளஸ் 1 பொதுத் தேர்வின் புதிய விதிகளின் படி, 32க்கும் மேற்பட்ட, வினாத் தொகுப்பு அடங்கிய வினா வங்கி வெளியிடப்படுகிறது.
தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல், பிளஸ் 2வுக்கான வகுப்புகளை நடத்தியதால், மாணவர்கள் போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை. 


புதிய திட்டம் : வரும் ஆண்டுகளில், ’நீட்’ மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெற, பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டங் களை வகுத்துள்ளது.


இதன்படி, பிளஸ் 1க்கும் இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 தேர்ச்சிக்கு சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், இந்த ஆண்டு பிளஸ் 1க்கும், அடுத்த ஆண்டு பிளஸ் 2வுக்கும், பாடவாரியாக தலா, 100 மதிப்பெண்ணாக குறைக்கப் பட்டுள்ளது. வினாக்கள் அமையும் முறை, அகமதிப்பீட்டு மதிப்பெண் முறை, வினாத்தாள் தயாரிப்பு விதிகள் போன்றவை மாற்றப்பட்டு உள்ளன. 


இந்த விதிகளின்படி, பிளஸ் 1 பொது தேர்வு எப்படி இருக்கும் என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்கு தீர்வு காண, பிளஸ் 1 வகுப்புக்கு, வினா வங்கி புத்தகம் வெளியிடப்படுகிறது.


உத்தரவு 


இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது: 


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், 32 மாவட்டங்களிலும், பிளஸ் 1 பாடத்திற்கு, பாட வாரியாக மாதிரி வினாக்கள் தயாரிக்க, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணி முடிந்ததும், இரண்டு மாதங்களுக்குள், வினா வங்கி புத்தகம் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.