WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 13, 2017

கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்.

''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,் அன்பழகன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், அமைச்சர் அன்பழகன், நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கல்வியாண்டில், கலை அறிவியல் கல்லுாரிகளில், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதனால், புதிதாக, எட்டு இடங்களில் கலை அறிவியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. பல்கலைகளுக்கு உட்பட்ட, மூன்று உறுப்புக் கல்லுாரிகளும் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இக்கல்லுாரிகளில் இக்கல்வியாண்டுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. கலை அறிவியல் கல்லுாரிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்ததால், இந்தாண்டு புதிதாக, 250 பாடப்பிரிவுகளும், உறுப்புக் கல்லுாரிகளில், 89 பாடப்பிரிவுகளும் துவங்கப்பட உள்ளன. அந்தந்த கல்லுாரிகளில் முதுகலை வகுப்புகளும் துவங்கப்பட 
உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.