பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஐ) ஆகியவற்றுக்கு மாற்றாக
உயர்கல்வியைக் கண்காணிக்க ஒரே அமைப்பை உருவாக்கும் யோசனையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, தொழில்நுட்பக் கல்வி, தொழில்நுட்பம் சாராத கல்வி ஆகியவற்றுக்கு வேவ்வேறு தலைமை அமைப்புகள் இருப்பதை மாற்றி, உயர்கல்வி மேம்பாடு, கட்டுப்பாட்டு அமைப்பு என்ற ஒரே அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவர மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், நீதி ஆயோக்கும் முடிவு செய்திருந்தன.
இது தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த மனித வளத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா, உயர்கல்வியை நிர்வகிக்க பொதுவான அமைப்பை ஏற்படுத்தும் திட்டம் இப்பாது இல்லை என்றார்.
எனினும், அரசின் முயற்சி கைவிடப்பட்டதற்கான காரணம் எதையும் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
உயர் கல்வியை நிர்வகிக்க பொதுவான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்படுவது புதிய விஷயமல்ல. இதற்கு முன்ப கல்விச் சீர்திருத்தம் குறித்து பல்வேறு ஆணையங்கள் முந்தைய மத்திய அரசுகளுக்கு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.