WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 28, 2017

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வருமா? துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விளக்கம்.

''மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துஒற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்க முடியும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 68, தெரிவித்தார்.

                                            

சென்னை அண்ணா பல்கலையில் நடந்த, 'புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.

ஒப்பந்தம்
மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:

வேளாண்மைக்கும், உற்பத்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறி விட்டு, வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் அனுமதிப்பது ஏன்?

சர்வதேச வர்த்தக அமைப்பில் நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்தியாவில் தேவைக்கு அதிக உற்பத்தி உள்ளதால், அதை, நாம் ஏற்றுமதி செய்கிறோம். வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை தடை செய்தால், நம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், சர்வதேச அளவில், இந்தியாவின் நட்புறவில் சிக்கல் ஏற்படும்.

மதிப்பீட்டு முறை

வல்லரசு நாடாக மாறும் உறுதி ஏற்று விட்ட நிலையில், ௩௦ சதவீதம் பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது ஏன்?

மக்களின் கல்வியறிவை வளர்க்கவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும், பல நிதியுதவி, மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கப்பட்ட மானியம், வேறு வகையில் சென்று கொண்டிருந்தது. அதை மாற்றவே, நேரடி மானிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஒரே வகை பாடத்திட்டம் உருவாக்க முடியாதா?

இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டம், பாடங்கள், பயிற்று முறை, தேர்வு மற்றும் மதிப்பீட்டு முறை உள்ளது.

கல்வி கொள்கை

இங்கே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் பெயர், மற்ற மாநிலத்தவருக்கு தெரியாது. அங்கே உள்ள தியாகிகளின் பெயர், இங்கே தெரியாது. இந்தியா பல மாநிலங்கள் கொண்ட கூட்டாட்சி தத்துவத்தில் செயல்படுகிறது. தற்போது சமமான கல்வி வழங்க, தேசிய அள வில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது.


அதன் பின், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே, தேசிய அளவில் ஒரே பாடத்திட்டத்தை நோக்கி செல்லலாம்.

இந்தியாவில் வேளாண்மை வளர வேண்டுமா; தொழிற்துறை வளர வேண்டுமா?

இரண்டும் வளர வேண்டும். வேளாண்மை வளர்ந் தால் தான், தொழிற்துறையும் வளரும்; தொழிற் துறை வளர்ந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்ற முறையில், விவசாயத்திற்கே என் முன்னுரிமை.

நடிகர், அரசியல்வாதி, ஆசிரியர் என, ஒவ்வொரு வரும் தங்கள் பிள்ளைகளை, தங்களை போல் வர விரும்புகின்றனர். ஆனால், ஒரு விவசாயி தன் பிள்ளையை, விவசாயியாக்க விரும்புவதில்லை. இந்த நிலைமாறும் வகையில், வேளாண் துறை வளர வேண்டும்.

உரிமை

சமூக வலைதளங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவு செய்வது, அனைவருக்கும் சுதந்திரமான உரிமை. ஆனால், எந்தவித பிழை திருத்தம் இன்றி, எப்படி வேண்டு மானாலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. செய்தி தாள்களில் தவறுகள் வந்தால், அதை திருத்தி கொள்ளலாம். அதற்கென, ஆசிரியர் குழு இயங்கு கிறது; ஆனால், சமூக வலைதளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. அதற்கு, ஒழுங்குமுறை தேவை.

மாணவி கேட்டார்

'இந்தியாவில் ஜாதியை ஒழிப்போம்' என, மத்திய அரசே உறுதி ஏற்க சொல்கிறது. அப்படியென்றால், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவது ஏன்?

குறிப்பிட்ட ஜாதியினர், நம் நாட்டில் கோவிலுக்குள் செல்ல முடியாமலும், கல்வி அறிவு கிடைக்காமலும், சம உரிமை இன்றியும், அடக்கி, ஒடுக்கப்பட்டனர். அவர்களையும் சமமாக கொண்டு வர, இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்தது. 'யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். இட ஒதுக்கீட்டில் நான் பாதிக்கப்படுகிறேன்' என, ஒரு மாணவி என்னிடம் கேட்டார்.

'எப்படி உன் மூதாதையரின் சொத்து உனக்கு கிடைக்கிறது' என, கேட்டேன். 'அது பாரம்பரியமாக வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது' என்றார். அப்படி தான், ஜாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பாரம்பரியமாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அனைவரும் சமம் என்ற நிலை வரும் போது, இதை பற்றி யோசிக்கலாம்.இவ்வாறு, வெங்கையா நாயுடு பதில் அளித்தார்.



நாம் பகைவர்களோ, எதிரிகளோ அல்ல!


''நாம் யாரும் எதிரிகள் அல்ல; பகைவர்கள் அல்ல. ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்,''என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், ௭௦ம் ஆண்டு நிறைவை ஒட்டி, மத்திய அரசு சார்பில், 'புதிய இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்'

1 comment:

  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
    2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
    பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
    போராட்டம்! போராட்டம்! போராட்டம்!

    அனைவரும் வாரீர்!
    நாள்: 05:09:2017 செவ்வாய்கிழமை
    நேரம்: காலை 10:30
    இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
    ஈரோடு

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
    பெற்றோர் கூட்டமைப்பு
    மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
    வடிவேல் சுந்தர் 8012776142.
    இளங்கோவன் 8778229465
    மாநில ஆலோசகர்கள்
    திருமதி. சித்ரகலா
    திருமதி. ஜெயசித்ரா
    திருமதி .ஹெலினா மாலதி
    மாநில பொருளாளர்
    திரு கார்த்திகேயன்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

    ஈரோடு : விஜயக்குமார் 9524808568
    சுகுணாதேவி 9578750010
    கோவை:கார்த்திகேயன்:8870452224
    தேனி- தினகரன்:9585655579
    ரஞ்சித் :96551 60595
    திருவாரூர்: பிரபாகரன்:9047294417
    தென்னரசு : 9751102497
    மதுரை :சங்கர்:9626580093
    விருதுநகர்:முருகேசன்:9500959482
    புதுக்கோட்டை: பழனியப்பன்:9787481333
    தூத்துக்குடி & குமரி:ஜான்சாமுவேல் :9123586458
    காஞ்சிபுரம்:ராமராசு:9952439500
    ரவிவர்மன்:988498751
    மணிகண்டன்: 8124485365
    திருநெல்வேலி:காசிபாண்டி:9442580219
    மணிகண்டன் :8610366238
    பேச்சிமுத்து:9442330817
    பெரம்பலூர்:குமரன்:9944524724
    திருவண்ணாமலை:ஏகாம்பரம்:9025342468 முனுசாமி:9952589164
    ராமநாதபுரம்: முருகேஸ்வரி:7598059373
    திருப்பூர்: CS.பிரியா:9842617212
    திருச்சி:சரவணன்: 9994598748
    ஸ்டீபன் : 99432 00550
    சித்ரா :90808 67298
    திண்டுக்கல்: சாமுவேல்:9566555556
    சென்னை: ரமேஷ் கார்த்திக்:8344941224
    சேலம் : பரமேஷ்வரன் 9942661187
    மோகன் பூரணி 9976815763
    நாமக்கல்: யுவராஜ் 9585975356
    தஞ்சாவூர் பிரேம்குமார் : 9597200610
    நாகபட்டினம் இரமேஷ் :97896 76737
    சிவகங்கை : செந்தில்வேல் 91596 67610
    விழுப்புரம்: மாலா 84892 23636

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.