உதவி பேராசிரியர் பணிக்கான, மாநில அளவிலான, 'செட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்' என்ற, தேசிய தகுதித் தேர்வு அல்லது 'செட்' என்ற, மாநில தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, 'செட்' தேர்வு, ஏப்., 23ல், தமிழகத்தில் நடந்தது. கொடைக்கானல் தெரசா பல்கலை நடத்திய தேர்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, 15 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விபரங்கள், www.tnsetexam2017mtwu.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள், நேற்று நண்பகலில் வெளியானதால், ஒரே நேரத்தில் பலரும் தேர்வு முடிவை தெரிந்து கொள்ள, இணையதளத்தை இயக்கினர். அதனால், இணையதளம் முடங்கியது; பிற்பகலில் இயல்பு நிலைக்கு திரும்பியது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.