WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 25, 2017

Big News: பள்ளி கல்வி துறை செயலர் மாற்றம்.


பள்ளி கல்வித்துறை செயலர் உதய சந்திரன் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பள்ளி கல்வித்துறை செயலராக
பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலராக இருந்தார். பள்ளி கல்வித்துறை செயலராக இருந்த உதய சந்திரன், பள்ளி பாட திட்டங்களை மாற்றி அமைக்கும் பணியை மட்டும் கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், சிவகங்கை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட கலெக்டராக, ரோகிணி, சிவகங்கை மாவட்ட கலெக்டராக, லதா, கடலூர் மாவட்ட கலெக்டராக, பிரசாந்த், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக, கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.