WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 17, 2017

டிப்ளமா இன்ஜி., புதிய பாடத்திட்ட விபரம் வெளியீடு.

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் மாணவர்கள், டிப்ளமா இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், சில பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்துள்ளன.இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தின்படி, பழைய பாடத்திட்டத்துக்கு மாற்றான பாடங்களை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரங்களை, www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.