WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 1, 2017

5 நாட்களுக்கு தொடர் மழை : பொதுப்பணி துறை, 'அலர்ட்'

மழை நிலவரங்களை கண்காணிக்க, அனைத்து மாவட்ட பொதுப்பணித் துறையினரும், 'அலர்ட்' செய்யப் பட்டுள்ளனர். பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் பிரிவால், தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நீர்வளத் துறையினர், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை காரணமாக, மாநிலம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து துவங்கி உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட அணைகளுக்கு, நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. 'அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. இதையடுத்து, அரசு கட்டடங்கள் மற்றும் நீர்நிலைகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், அரசு கட்டடங்களின் மாடி மற்றும் தரைப்பகுதிகளில், நீர் தேங்குவதை தடுத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைகளின் நீர்வரத்தை, 24 மணி நேரமும் கண்காணித்து, அரசுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிகளில், ஐந்து நாட்கள் தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

1 comment:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.