WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 17, 2017

அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை.

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.
மாத சம்பளம்சில ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், ௧௦ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.
தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எச்சரிக்கைஇதற்காக, மாதந்தோறும், ௧,௦௦௦ - ௩,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்வி
அதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.