புதிய பாடத்திட்டத்திற்கான உயர்மட்டக்குழு கூட்டத்தில், பாடத்திட்ட அறிக்கையை விரைந்து முடித்து, அரசிடம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்திற்காக, உயர்மட்டக்குழு மற்றும் கலைத்திட்ட குழு
அமைக்கப்பட்டு, கருத்தரங்கம் நடத்தப்பட்டது.பாடத்திட்டத்திற்கு முந்தைய கலைத்திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆய்வுக்கூட்டம் : இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று, தலைமைச் செயலகத்தில் அவசரமாக நடந்தது.இதில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன், முதன்மை செயலர், பிரதீப் யாதவ், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் மற்றும் இயக்குனர்கள்,குழு உறுப்பினர்களும்பங்கேற்றனர்.உயர்நீதிமன்ற உத்தரவுப் படி, பாடத் திட்டத்திற்கானபள்ளிக்கல்வி செயலராக நியமிக்கப்பட்ட உதயசந்திரன், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சர் பங்கேற்பதால், அவரை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என, கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் இருப்பதாக, பதிவு செய்யப்பட்டது. அறிக்கை தாக்கல் : அதே நேரம், பாட நுால் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதிக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு, பாடத்திட்ட மாற்றம் குறித்து, அவர் ஆலோசனை வழங்கினார். அ.தி.மு.க., -எம்.பி., விஜயகுமாரும் பங்கேற்றார். பாடத்திட்ட பணிகள் குறித்து, இயக்குனர்கள் இளங்கோவன், கார்மேகம், அறிவொளி ஆகியோர் விளக்கினர். அண்ணா பல்கலைமுன்னாள் துணைவேந்தர், பாலகுரு சாமி, இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து, பாடத்திட்ட அறிக்கையை விரைந்து முடித்து,அரசிடம் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.