சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர்
கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.