தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, ௩,௦௦௦ பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், ௧௧௦ விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான பணிகள் துவங்கி உள்ளன; ௪௦௩ சரகங்களில், ஏழு பள்ளிகள் வீதம் தேர்வு செய்ய, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, ௨௧ம் தேதிக்குள் முடித்து, அரசின் அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.