WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 10, 2017

ஜாக்டோ - ஜியோ மீண்டும் நாளை முதல் போராட்டம்.

''அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம், நாளை முதல் மீண்டும் துவங்கும்,'' என, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால், ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு கூடி, ஏற்கனவே வலியுறுத்திய கோரிக்கைகளுடன், தற்போது, 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் இணைத்து, 11ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.அன்று அனைத்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்; 12ம் தேதி மறியல்; அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
போராட்டத்தோடு நீதிமன்ற வழக்கையும் சந்திப்போம். 28 ஆசிரியர்கள் சங்கம், 64 அரசு ஊழியர் சங்கம் என, மொத்தம், 92 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.