Wednesday, October 11, 2017
'குரூப் - 1' முதன்மை தேர்வு: அக்., 13ல் துவக்கம்.
துணை கலெக்டர் உட்பட, 85 காலி இடங்களுக்கான, 'குரூப் - 1' முதன்மை தேர்வு, அக்., 13ல் துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34; வணிக வரி கமிஷனர், எட்டு; மாவட்ட பதிவாளர், ஒன்று; மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஐந்து மற்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி, எட்டு என, மொத்தம், 85 இடங்களுக்கு, குரூப் - 1 முதல்நிலை எழுத்துத் தேர்வு, பிப்., 19ல் நடந்தது.
இதன் முடிவுகளை, ஜூலை, 21ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு, 4,602 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
'முதன்மை எழுத்துத் தேர்வு, அக்., 13 - 15 வரை, காலை, 10.00 மணி முதல், பகல், 1.00மணி வரை நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஷோபனா அறிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.