Wednesday, October 25, 2017
விரைவில் வண்ணமயமாகும் 130 அரசுப் பள்ளிகள்!
கோவை மாவட்டத்தில், 130 அரசுப் பள்ளிகளின் வகுப்பறை சுவர்களை வண்ணமயமாக்க, மத்திய அரசு, 19.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுடன், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, செயல்வழி கற்றல் முறையை அறிமுகப்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில், ஆங்கில வழி கல்விமுறை அமலில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தவும், உச்சரிப்பு, வார்த்தைகளை உள்வாங்கும் வகையில், வகுப்பறை சுவர்களில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
நடப்பாண்டில், பாடத்திட்டம் தொடர்பாக, வகுப்பு வாரியாக, சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைய, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவை, திருப்பூர் உள்ளடக்கிய, 22 வட்டாரங்களில், 130 அரசுப்பள்ளிகள், தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இங்கு, காய்கறிகள், பழங்கள், போக்குவரத்து சாதனங்கள், மனித உடல் உறுப்புகள், விலங்குகள், பறவைகள் என, 16 தலைப்புகளில், படங்கள் வரைய உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், ’ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கும் வகையில், சுவர் சித்திரங்கள் வரையப்படுகின்றன. இதைக் காண்பித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
வண்ண மயமான ஓவியங்கள் வரையப்படுவதால், மாணவர்களும் ஆர்வமுடன் படிப்பர். இத்திட்டத்திற்கு, 19.80 லட்சம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் படிக்கும், ஆங்கில வழி பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஓவியங்கள் வரையப்படும்’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.